மது பாட்டில்கள் விற்ற 2 பேர் கைது


மது பாட்டில்கள் விற்ற 2 பேர் கைது
x

மது பாட்டில்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை

வந்தவாசி

மது பாட்டில்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வந்தவாசியை அடுத்த காவினியத்தூர் கிராமம் செல்லியம்மன் கோவில் அருகில் மதுபாட்டில்கள் வைத்து விற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கீழ்க்கொடுங்காலூர் போலீசார் அங்கு சென்று சோதனையிட்டனர்.

அப்போது சென்னை செட்டிமேடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முனுசாமி மகன் மணிகண்டன் (வயது 35) என்பவர் 15 மதுபாட்டில்களுடன் பிடிபட்டார்.

இதேபோல் ஓசூர் ஒரத்தி மெயின் ரோடு மணி மகன் அய்யப்பன் (43) என்பவர் வீட்டின் பின்புறம் மதுபாட்டில்களை வைத்து விற்றபோது போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் 20 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னர் மணிகண்டன் மற்றும் அய்யப்பன் இருவரையும் கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.


Next Story