புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர்
கரூர் வெங்கமேடு மற்றும் கரூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சிலர் புகையிலை பொருட்களை வைத்து விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் வெங்கமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் தலைமையிலான போலீசார் அப்பகுதிகளில் தீவிர சோதனை செய்தனர். அப்போது வெங்கமேடு பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த பரமசிவம்(வயது 70) என்பவரை கைது செய்தனர். இதேபோல் கரூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா தலைமையிலான போலீசார் சோதனை செய்ததில், மனோகராகார்னர் பகுதியில் உள்ள ஒரு கடையில் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ரவிச்சந்திரன்(38) என்பவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story