புகையிலை பொருட்களை விற்ற 2 பேர் கைது


புகையிலை பொருட்களை விற்ற 2 பேர் கைது
x

புகையிலை பொருட்களை விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள இலந்தைகூடம் கிராமத்தில் வெங்கனூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த கடையில் போலீசார் சோதனை செய்து 16 கிலோ புகையிலைைய பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கடையின் உரிமையாளர் செம்பியகுடி கிராமத்தை சேர்ந்த பாண்டியன் (வயது 38), இலந்தைகூடம் கிராமத்தை சேர்ந்த பூபாலன் (30) ஆகிேயாரை கைது செய்து அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story