புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
சேலம்
ஓமலூர்:-
ஓமலூரை அடுத்த மல்லிகுட்டை மன்னாதன் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் திருமூர்த்தி (வயது 27). இவர், ஓலைப்பட்டி பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த போலீசார் அங்கு இருந்த 15 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் திருமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து பின்பு ஜாமீனில் விடுவித்தனர். இதேபோல் தொளசம்பட்டி கங்காணிபட்டியில் சத்தியமூர்த்தி (40) என்பவர் புகையிலை பொருட்கள் விற்றதாக தொளசம்பட்டி போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர். அவரிடம் இருந்து ரூ.7 ஆயிரத்து 300 மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story