பெங்களூருவில் இருந்து திருப்பூருக்கு காரில் 500 கிலோ புகையிலை பொருட்களை கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூருவில் இருந்து திருப்பூருக்கு காரில் 500 கிலோ புகையிலை பொருட்களை கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
x

பெங்களூருவில் இருந்து திருப்பூருக்கு காரில் 500 கிலோ புகையிலை பொருட்களை கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்

நல்லூர், ஏப்.3-

பெங்களூருவில் இருந்து திருப்பூருக்கு காரில் 500 கிலோ புகையிலை பொருட்களை கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

புகையிலை பொருட்கள்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து திருப்பூருக்கு ஒரு காரில் புகையிலை பொருட்கள் கடத்தி வருவதாக திருப்பூர் மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினவ் உத்தரவின்படி நல்லூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் நேற்று காலை காசிபாளையம் சோதனைச் சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அந்த காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காருக்குள் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்த மூட்டைகளில் என்ன? இருக்கிறது என்று காரில் இருந்த 2 பேரிடம் போலீசார் கேட்டனர். அப்போது அவர்கள் சரியான பதில் ெசால்லவில்லை என்று கூறப்படுகிறது. சந்தேகத்தின் பேரில் அந்த மூட்டைகளை போலீசார் பிரித்து பார்த்தனர். அப்போது அவற்றில் தடை ெசய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

2 பேர் கைது

இதையடுத்து காரில் இருந்தவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் சேலத்தை சேர்ந்த அர்ஜுனன் மகன் மணிகண்டன் (வயது 38), சேலம் ராம் தியேட்டர் பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் அய்யப்பன் (32) என்பது தெரிய வந்தது.

அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் காரில் மூட்டை மூட்டையாக இருந்த 501 கிலோ புகையிலை ெபாருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் இருவரும் சேர்ந்து திருப்பூர் நாச்சிபாளையம் பகுதியில் உள்ள கடைகளில் விற்பனை செய்ய பெங்களூரில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி கொண்டு வந்தது தெரிய வந்தது. இது குறித்து நல்லூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Next Story