சாராயம் கடத்திய 2 பேர் கைது


சாராயம் கடத்திய 2 பேர் கைது
x

திருமருகல் அருகே சாராயம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் அருகே சாராயம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

வாகன சோதனை

திருமருகல் பகுதியில் திட்டச்சேரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக வேகமாக 2 மோட்டார் சைக்கிள்கள் வந்தது. அந்த மோட்டார் சைக்கிள்களை சந்தேகத்தின் பேரில் மறித்து போலீசார் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் மோட்டார் சைக்கிளில் இருந்த 2 மூட்டையில் 130 சாராயம் பாட்டில்கள் இருந்தது. இதை தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களில் வந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர்.

2 பேர் கைது

விசாரணையில் அவர்கள், கொட்டாரக்குடி ஊராட்சி சின்னகண்ணமங்கலம் காலனித்தெருவை சேர்ந்த நீதிதேவன் மகன் சாய்குமார் (வயது 22), திருநள்ளாறு மெயின்ரோடு பகுதியை சேர்ந்த மதிவாணன் (38) என்பதும், இவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயத்தை மோட்டார் சைக்கிளில் கீழ்வேளூர் பகுதிக்கு கடத்தி சென்றதும் தெரிய வந்தது.

இதுகுறித்து திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் சுரேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாய்குமார், மதிவாணன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 130 பாட்டில் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.


Next Story