மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது


மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது
x

மூலைக்கரைப்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள முனைஞ்சிப்பட்டி இந்திராநகரில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், கூந்தன்குளத்தை சேர்ந்த சுடலைக்கண்ணு மகன் முத்துப்பாண்டி (வயது 22), காடன்குளத்தை சேர்ந்த மந்திரம் மகன் ராமர் (23) என்பதும், தூத்துக்குடி மாவட்டம் பேய்க்குளத்தில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி கூடுதல் விலைக்கு விற்க கொண்டு வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து 55 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story