கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது


கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது
x

கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது

விருதுநகர்

சிவகாசி

திருத்தங்கல் ஆலமரத்துப்பட்டி ரோட்டில் உள்ள முத்துமாரி நகரை சேர்ந்தவர் ஜோதீஸ்வரன்(வயது 35). இவர் சத்யா நகர்-கண்ணகி காலனி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்கிற மணிகண்டன்(19), ஆலாவூரணி வேல்சாமி (25) ஆகிய 2 பேரும் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறிக்க முயன்றுள்ளனர். இதுகுறித்து ஜோதீஸ்வரன் திருத்தங்கல் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.


Related Tags :
Next Story