புகையிலை பொருட்கள் விற்க முயன்ற 2 பேர் கைது


புகையிலை பொருட்கள் விற்க முயன்ற 2 பேர் கைது
x

சுத்தமல்லியில் புகையிலை பொருட்கள் விற்க முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

பேட்டை:

சுத்தமல்லியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்க முயன்றதாக பேட்டையை சேர்ந்த செய்யது அலி (வயது 45), சுத்தமல்லியைச் சேர்ந்த சீனிவாசன் (58) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story