மது விற்ற 2 பேர் பிடிபட்டனர்


மது விற்ற 2 பேர் பிடிபட்டனர்
x

நெல்லையில் மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை மாநகரில் மதுபாட்டில்கள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் மதுஒழிப்பு மற்றும் அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்றுக்கொண்டு இருந்த நடுவக்குறிச்சி உடையார்குளத்தை சேர்ந்த சுடலைமணி (வயது 23) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 48 மதுபாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.அதேபோல் புதிய பஸ்நிலையம் அருகே மதுபாட்டில்கள் விற்றுக்கொண்டு இருந்த மூலைக்கரைப்பட்டியை சேர்ந்த சுகுமார் (39) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story