ரெயிலில் அடிபட்டு 2 பேர் பலி
ரெயிலில் அடிபட்டு 2 பேர் பலியானார்கள்.
குடியாத்தத்தை அடுத்த மேல்பட்டி-வளத்தூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து காட்பாடி நோக்கி சென்ற ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
இதேபோல லத்தேரி-காவனூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே 45 வயதுடையவர் தண்டவாளத்தை கடக்கும் போது காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்ற ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று, இறந்து கிடந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.