2 பேர் படுகாயம்
2 பேர் படுகாயம்
திருவாரூர்
வலங்கைமான் அருகே உள்ள மேலபூண்டி கிராமத்தை சேர்ந்த தினேஷ் (வயது30). ஆட்டோ டிரைவரான இவர் நேற்று ஆட்டோவில் ஏற்றி வந்த விறகை வலங்கைமான் புங்கஞ்சேரி தெருவில் இறக்கினார். பின்னர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த புங்கஞ்சேரி தெருவை சேர்ந்த அசோக் (27), வலங்கைமான் அருகே உள்ள மேல விடையல் ஊராட்சி பண்டித சோழநல்லூர் கிராமத்தை சேர்ந்த அசோக் (40) ஆகியோர் ஓட்டிவந்த மோட்டார்சைக்கிள் மீது ஆட்டோ மோதியது. இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வலங்கைமான் போலீசார் விபத்திற்கு காரணமான ஆட்டோவை பறிமுதல் செய்து தினேசிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story