கஞ்சா விற்ற 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கஞ்சா விற்ற 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 23 Sept 2022 12:15 AM IST (Updated: 23 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

குமரியில் கஞ்சா விற்ற 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள். அதில் ஒரு பகுதியாக கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு வருகிறது. மேலும் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் 3 கஞ்சா வியாபாரிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் தற்போது மேலும் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. அதாவது வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்த பிரதீஸ் (வயது 24), கட்டிமாங்கோடு பகுதியைச் சேர்ந்த சகாய கவின் (24) ஆகிய 2 பேரை இரணியல் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பரிந்துரையின் பேரில் கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டதைத் தொடர்ந்து 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தனர். குண்டர் சட்டம் பாய்ந்ததை தொடர்ந்து 2 பேரும் பாளையங்கோட்டை ஜெயிலுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.


Next Story