சாராயம் விற்ற 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
சாராயம் விற்ற 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை பே கோபுரம் 3-வது தெருவை சேர்ந்தவர் சண்முகம் (வயது 38). இவர் சாராய விற்பனையில் ஈடுபட்ட போது திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர். அதேபோல் கீழ்பென்னாத்தூர் தாலுகா வழுதலங்குணம் கிராமத்தை சேர்ந்த வீரமணி (29) என்பவரையும் சாராய விற்பனையில் ஈடுபட்ட போது மங்கலம் போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் இருவரும் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதற்காக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் கார்த்திகேயன், கலெக்டர் முருகேசுக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் அவர்கள் இருவரையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story