லாட்டரி விற்ற 2 பேர் கைது


லாட்டரி விற்ற 2 பேர் கைது
x

நெல்லையில் லாட்டரி விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை தச்சநல்லூர் சாய்பாபா கோவில் பகுதியில் சிலர் வாட்ஸ்-அப் தகவல் மூலமாக தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி தச்சநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு சென்று சோதனை செய்தனர்.

அப்போது தச்சநல்லூர் சிவன் கோவில் தெற்கு தெருவை சேர்ந்த அரி ராம் (வயது 24), கங்கைகொண்டானை சேர்ந்த சிவநேசன் (44) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 3 செல்போன்கள், ரூ.10 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story