வாலிபரை மிரட்டிய 2 பேர் சிக்கினர்


வாலிபரை மிரட்டிய 2 பேர் சிக்கினர்
x

நெல்லை அருகே வாலிபரை மிரட்டிய 2 பேர் சிக்கினர்.

திருநெல்வேலி

நெல்லை அருகே உள்ள பர்கிட்மாநகரம் பகுதியை சேர்ந்தவர் சின்னத்துரை (வயது 20). தொழிலாளியான இவர் அந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சங்கர் (36), சிவசுப்பிரமணியன் (35) ஆகியோர் சேர்ந்து முன்விரோதம் காரணமாக சின்னத்துரையிடம் தகராறு செய்து, மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில்பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, சங்கர், சிவசுப்பிரமணியன் ஆகியோரை கைது செய்தனர்.


Next Story