நிதி நிறுவன அதிபர் வீட்டில் கொள்ளையடித்த மேலும் 2 பேர் கைது


நிதி நிறுவன அதிபர் வீட்டில் கொள்ளையடித்த மேலும் 2 பேர் கைது
x

நிதி நிறுவன அதிபர் வீட்டில் கொள்ளையடித்த மேலும் 2 பேர் கைது

திருப்பூர்

அனுப்பர்பாளையம், ஜூலை.11-

திருப்பூரில் நிதி நிறுவன அதிபர் வீட்டில் கொள்ளையடித்த மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர். . அவர்களிடம் இருந்து 26 ½ பவுன் நகை, ரூ.1½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கொள்ளை

திருப்பூர் ராயபண்டாரம் வீதியை சேர்ந்தவர் சங்கமேஸ்வரன். நிதி நிறுவன அதிபர். கடந்த மாதம் 12-ந்தேதி மதியம் இவரது வீட்டிற்கு வந்த முகக்கவசம் அணிந்து வந்த மர்ம ஆசாமிகள் சங்கமேஸ்வரன், அவருடைய மனைவி, மகள் ஆகியோரை கட்டி போட்டு பணம், நகையை கொள்ளையடித்து தப்பி சென்றனர். இதுகுறித்து வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளை வழக்கில் திட்டம் வகுத்து கொடுத்த திருப்பூரை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் என்பவரை ஏற்கனவே போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்த மறுகால்குறிச்சியை சேர்ந்த வானமாமலை (வயது 22), நல்லகண்ணு (21) ஆகியோரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 49 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் 2பேர் கைது

இதே வழக்கில் தேடப்பட்டு வந்த மறுகால்குறிச்சியை சேர்ந்த இசக்கிபாண்டி (22), ராமையா (26) ஆகியோரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 26½ பவுன் தங்க நகை, பணம் ரூ.1½ லட்சம் மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்தப்பட்ட கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் 2 பேர் மீது நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 26½பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சத்து 5 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த கொள்ளை சம்பவத்தில் சிறப்பாக செயல்பட்டு, குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு பாராட்டினார்.


Next Story