குண்டடம் அருகே ேமாட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
குண்டடம் அருகே ேமாட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
குண்டடம்
குண்டடம் அருகே ேமாட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மோட்டார் சைக்கிள் திருட்டு
திருப்பூர் மாவட்டம் குண்டடம் போலீஸ் சரகம் குள்ளாய்பாளையத்தை சேர்ந்தவர் பூபதி (வயது26), தேங்காய் பறிக்கும் தொழிலாளியான இவர் கடந்த 8-ந்தேதி குள்ளாய்பாளையம் விநாயகர் கோவில் அருகில் தனது மோட்டார்சைக்கிளை நிறுத்தி இருந்தார்.
நள்ளிரவில் அங்கு சென்ற மர்ம ஆசாமிகள் 2 பேர் பூபதியின் மோட்டார்சைக்கிளை திருடிச்சென்றனர்.இதுபற்றி பூபதி குண்டடம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுபற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
2 வாலிபர்கள் கைது
இந்த நிலையில் நேற்று குண்டடத்தை அடுத்துள்ள திருப்பூர் பிரிவு போலீஸ் சோதனைச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் மோட்டார்சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அவர்கள் திருப்பூரை அடுத்த ஊதியூர் போலீஸ் சரகம் தாளக்கரையை சேர்ந்த பிரகாஷ் (30), மகேந்திரன் (29) என்பதும் இவர்கள் இருவரும் குள்ளாய்பாளையத்தில் பூபதியின் மோட்டார்சைக்கிளை திருடிச்சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.