பெண்ணிடம் நகையை பறித்த 2 பேர் கைது
பெண்ணிடம் நகையை பறித்த 2 பேர் கைது
பல்லடம்
பல்லடம் அருகே கணவருடன் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் நகையை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நகை பறிப்பு
பல்லடம் வடுகபாளையம் முனியப்பன் கோயில் வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி ஜானகி(வயது 56). கணவன் - மனைவி இருவரும் உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு செல்வதற்காக சம்பவத்தன்று மாலை ஸ்கூட்டரில் பல்லடம் அருகே உள்ள சாமி கவுண்டம்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாமி கவுண்டம்பாளையம் பிரிவு ரோட்டில் செல்லும் போது இவர்களை பின்தொடர்ந்து மற்ெறாரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர்ர. அவர்கள் திடீரென ஜானகி கழுத்தில அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். .இந்த நிலையில், பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை- பருவாய் ரோட்டில் பல்லடம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் போலீசாரை கண்டதும் தப்பிச்செல்ல முயன்றனர். அவர்களை துரத்தி பிடித்த போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
2 பேர் கைது
போது அவர்கள் சாமி கவுண்டம்பாளையத்தில்
விசாரணையில் அவர்கள் கோவை புலியகுளத்தைச் சேர்ந்த அப்பாஸ்(23), திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்த திலீப் ராஜ்(30) எனவும், ஜானகியிடம் நகையை பறித்தவர்கள் என்பவது தெரிய வந்தது இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.