பனமரத்துப்பட்டி பகுதியில் வீடுகளில் நகைகள் கொள்ளை வழக்கில் 2 பேர் கைது 10 பவுன்- மோட்டார் சைக்கிள் மீட்பு


பனமரத்துப்பட்டி பகுதியில்  வீடுகளில் நகைகள் கொள்ளை வழக்கில் 2 பேர் கைது  10 பவுன்- மோட்டார் சைக்கிள் மீட்பு
x

பனமரத்துப்பட்டி பகுதியில் வீடுகளில் நகைகள் கொள்ளை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 10 பவுன் நகை- மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டது.

சேலம்

பனமரத்துப்பட்டி,

வீடுகளில் கொள்ளை

சேலம் மாவட்டம் மல்லூர் அருகே தாசநாயக்கன்பட்டி சவுடாம்பிகா நகரை சேர்ந்தவர் நடராஜன் (வயது 61). இவர் தனியார் வங்கியில் ஊழியராக வேலை செய்து ஒய்வு பெற்றவர். இவரது வீட்டில் இருந்த 5 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் திருட்டு போனது.

இதேபோல் தனியார் ஜவுளி நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மாடசாமி (72) என்பவரது வீட்டிலும் 10 பவுன் நகை திருட்டு போனது. இந்த திருட்டு சம்பவங்கள் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

2 பேர் கைது

இதற்கிடையே நேற்று ஆட்டையாம்பட்டி அருகே சென்னகிரி ஊராட்சி பெரும்பாறை காடு பகுதியை சேர்ந்த தறி தொழிலாளி ஜெயபிரகாஷ் (25), ஆட்டையாம்பட்டி ராமலிங்கம் ஆஸ்பத்திரி பின்புறம் உள்ள வெள்ளைகவுண்டர்காடு பகுதியை சேர்ந்த தறி தொழிலாளி மணிகண்டன் (32) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 10 பவுன் நகை, மோட்டார் சைக்கிள் ஆகியவை மீட்கப்பட்டது. இவர்கள் இருவரும் திருச்செங்கோடு, வெண்ணந்தூர் கொண்டலாம்பட்டி, மல்லூர், மகுடஞ்சாவடி ஆட்டையாம்பட்டி, அன்னதானப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும், அவர்கள் மீது 20-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


Next Story