சிறுவன் உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து


சிறுவன் உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து
x

மதுக்கூர் அருகே சிறுவன் உள்பட 2 பேரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்

மதுக்கூர்:

மதுக்கூர் அருகே சிறுவன் உள்பட 2 பேரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கத்திக்குத்து

மதுக்கூர் அருகே ராமாம்பாள்புரம், கீழக்காடு பகுதியை சேர்ந்த ரவி. இவருடைய மகன் சிவபாரதி (வயது23). சம்பவத்தன்று சிவபாரதி அதே பகுதியைச் சேர்ந்த முகமது மனாஸ்(17) என்பவரை கத்தியால் குத்தினார். இதை பார்த்து தடுக்க வந்த முகமது எஹியா(70) என்பவரையும் சிவபாரதி கத்தியால் குத்தினார்.

இதில் காயம் அடைந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வாலிபர் கைது

இதுகுறித்த புகாரின் பேரில் மதுக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவபாரதியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story