சரக்கு வாகனம் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம்
திருமங்கலம் நான்குவழிச்சாலையில் சரக்கு வாகனம் டயர் வெடித்து எதிரே வந்த லாரி மீது மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் நான்குவழிச்சாலையில் லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
திருமங்கலம்
திருமங்கலம் நான்குவழிச்சாலையில் சரக்கு வாகனம் டயர் வெடித்து எதிரே வந்த லாரி மீது மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் நான்குவழிச்சாலையில் லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கண்டெய்னர் லாரி
தென்காசியிலிருந்து மதுரை நோக்கி நேற்று கண்டெய்னர் லாரி வந்தது. லாரியை தென்காசியை சேர்ந்த அழகுமலை என்பவர் ஓட்டிவந்தார். இதேபோல் திருச்சியிலிருந்து திருச்செந்தூர் நோக்கி கொரியர் வேன் சென்றது. வேனை நெல்லையை சேர்ந்த கிருஷ்ணகுமார் ஓட்டி வந்தார்.
இந்த வேன் திருமங்கலம்-மதுரை நான்குவழிச்சாலையில் குதிரைசாரிகுளம் விலக்கு பகுதியில் அதிவேகத்தில் சென்ற போது கொரியர் வேன் டயர்வெடித்தது. இதில் நிலைதடுமாறிய வேன் நான்குவழிச்சாலை தடுப்பு சுவரை தாண்டி எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீது மோதியது.
2 பேர் படுகாயம்
இதில் கண்டெய்னர் லாரி நான்குவழிச்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரி டிரைவர் அழகுமலை, சரக்கு வாகனம் டிரைவர் கிருஷ்ணகுமார் இருவரும் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல்அறிந்த திருமங்கலம் டவுன் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். நடுரோட்டில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.