வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் படுகாயம்
வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
சிவகாசி,
விருதுநகர் செங்குன்றாபுரம் மாரியம்மன் கோவில்தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது 22). இவர் சிவகாசியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் வழக்கம் போல் சம்பவத்தன்று இரவு வேலை முடிந்தவுடன் தனது மோட்டார் சைக்கிளில் சிவகாசி- விருதுநகர் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். திருத்தங்கல் புதிய பஸ் நிலையத்தை கடந்து சென்ற போது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருத்தங்கல் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேபோல் சிவகாசி உசேன் காலனியை சேர்ந்தவர் நடராஜன் (33). இவர் சம்பவத்தன்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் விருதுநகர்- சிவகாசி ரோட்டில் வந்து கொண்டிருந்தார். வடமலாபுரம் மேம்பாலத்தில் வரும் போது அங்கு வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பில் பயங்கரமாக மோதியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்து குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.