வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் படுகாயம்
சிவகாசியில் வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
சிவகாசி,
சிவகாசி கிழக்கு பகுதியில் உள்ள சாமிபுரம் காலனியை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது80). இவர் சம்பவத்தன்று ரத்தினவிலாஸ் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள டீ கடைக்கு வந்து விட்டு வீட்டிற்கு திரும்ப சென்றுள்ளார்.
அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் தியாகராஜன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தியாகராஜனின் மகள் உமாதேவி சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேபோல் திருத்தங்கல் பழனிச்சாமி நாடார் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (41). இவர் சிவகாசியில் உள்ள ஒரு அச்சகத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி ராஜேந்திரன் மீது மோதியது. இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதுகுறித்து அவர் சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.