வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் படுகாயம்
சிவகாசி பகுதிகளில் வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
சிவகாசி,
சிவகாசி பகுதிகளில் வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
முதியவர் படுகாயம்
சிவகாசி பி.கே.என்.ரோட்டை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 63). இவர் தனது மனைவியுடன் சிவகாசி-திருத்தங்கல் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று விஜயகுமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் விஜயகுமார் படுகாயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து அவர் சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தொழிலாளி
இதேபோல் சிவகாசி தெய்வானை நகரை சேர்ந்த கண்ணன் (56) என்பவர் மாரனேரி பர்மா காலனியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் வேலை செய்து வருகிறார்.
இவர் சம்பவத்தன்று சிவகாசி-விளாம்பட்டி ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவரது மகன் ஸ்ரீராம் கொடுத்த புகாரின் பேரில் மாரனேரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.