2 பேர் மீது கள்ளச்சந்தை தடுப்பு சட்டம் பாய்ந்தது


2 பேர் மீது கள்ளச்சந்தை தடுப்பு சட்டம் பாய்ந்தது
x

ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் மீது கள்ளச்சந்தை தடுப்பு சட்டம் பாய்ந்தது

திருநெல்வேலி

நெல்லை குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா தலைமையில் கடந்த 5-ந்தேதி தாழையூத்தில் உள்ள ஒரு குடோனில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது கடத்துவதற்காக லாரியில் ஏற்றிக் கொண்டிருந்த 30 டன் ரேஷன் அரிசி சிக்கியது. இது தொடர்பாக தங்கராஜ், முத்துக்குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். சிலர் தப்பி ஓடிவிட்டனர். அவர்களிடம் இருந்து 1 லாரி, 4 கார்கள், 7 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.

இவர்களது நடவடிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் போலீசாரின் பரிந்துரையின் பேரில் நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, கள்ளச்சந்தை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் தங்கராஜ் மற்றும் முத்துக்குமார் ஆகிய 2 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டனர். இதற்கான உத்தரவை போலீசார் நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் சமர்ப்பித்தனர்.


Next Story