அழகப்பா பல்கலைக்கழகம் 2-வது இடம்


அழகப்பா பல்கலைக்கழகம் 2-வது இடம்
x

அழகப்பா பல்கலைக்கழகம் 2-வது இடம் பெற்றுள்ளது

சிவகங்கை

காரைக்குடி,

மத்திய கல்வி அமைச்சகத்தின் தேசிய கல்வி நிறுவன தரவரிசை அமைப்பு 2022-ம் ஆண்டுக்கான தேசிய கல்வி நிறுவன தரவரிசை பட்டியலை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டார். இதில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையே 28-வது இடமும், அகில இந்திய ஆராய்ச்சி நிறுவனங்களுக்கான தரவரிசையில் 43-வது இடமும் பெற்றுள்ளது. அகில இந்திய அளவில் தரவரிசைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 1,875 உயர் கல்வி நிறுவனங்களில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் 53-வது இடத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்திலிருந்து தரவரிசைப்படுத்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவன தரவரிசையில் அழகப்பா பல்கலைக்கழகம் 3-வது இடத்தை பெற்றுள்ளது. மாநில கலை மற்றும் அறிவியல் பல்கலைக்கழங்களின் தரவரிசையில் 2-வது இடத்தை பெற்றுள்ளது.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தை தரவரிசை பட்டியலில் தொடர்ந்து முன்னேற செய்த செய்த பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் ஆகியோரை தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன், பல்கலைக்கழக துணைவேந்தர், பொறுப்புக்குழு உறுப்பினர்கள் சுவாமிநாதன், பேராசிரியர் கருப்புசாமி, பதிவாளர் ராஜா மோகன் ஆகியோர் பாராட்டினர்.



Next Story