2 போலீஸ்காரர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்


2 போலீஸ்காரர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்
x

போலீஸ் நிலையத்திற்கு குற்ற விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில், தனிப்பிரிவு போலீஸ்காரர்கள் 2 பேரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவிட்டுள்ளார்.

திருநெல்வேலி

போலீஸ் நிலையத்திற்கு குற்ற விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில், தனிப்பிரிவு போலீஸ்காரர்கள் 2 பேரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவிட்டுள்ளார்.

உதவி கலெக்டர் விசாரணை

நெல்லை மாவட்டம் அம்பை போலீஸ் உட்கோட்டத்தில் உள்ள போலீஸ் நிலைய எல்லை பகுதிகளில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய பல்வீர்சிங், பற்களை பிடுங்கியதாக எழுந்த புகாரால் அவர் பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில், சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபிர் ஆலம் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. உதவி கலெக்டர் முன்பு, போலீசார் உள்பட 13 பேர் இதுவரை ஆஜராகி தங்களுடைய விளக்கங்களை அளித்துள்ளனர்.

2 பேர் இடமாற்றம்

இந்த நிலையில் மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து இதுதொடர்பாக விசாரணை நடத்துகிறது. இதில் பலர் கலந்து கொண்டு பற்களை பிடுங்கிய சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ளனர்.

இந்த நிலையில் விக்கிரமசிங்கபுரம் தனிப்பிரிவு போலீஸ்காரர் போகன், கல்லிடைக்குறிச்சி தனிப்பிரிவு போலீஸ்காரர் ராஜ்குமார் ஆகியோரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவிட்டுள்ளார்.


Next Story