மூதாட்டியிடம் 2½ பவுன் சங்கிலி பறிப்பு


மூதாட்டியிடம் 2½ பவுன் சங்கிலி பறிப்பு
x

கொல்லங்கோடு அருகே மூதாட்டியிடம் 2½ பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

கொல்லங்கோடு,

கொல்லங்கோடு அருகே மூதாட்டியிடம் 2½ பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

பால் வாங்க சென்றவர்

கொல்லங்கோடு அருகே உள்ள அடைக்காகுழியை சேர்ந்தவர் சோபனா (வயது 62). இவர் நேற்று காலை 6 மணியளவில் பால் வாங்க சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் சாலையோரம் 3 வாலிபர்கள் 2 மோட்டார் சைக்கிள்களில் நின்று கொண்டிருந்தனர்.

அவர்களில் ஒருவர் சோபனாவை பின் தொடர்ந்து சென்று ஆட்கள் யாரும் இல்லாத இடத்தில் வைத்து அவரது கழுத்தில் கிடந்த 2½ பவுன் தங்க சங்கிலியை பறித்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த சோபனா சத்தம் போட்டார். உடனே அந்த வாலிபர் தயாராக நின்ற தனது கூட்டாளிகளுடன் மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்றார்.

கண்காணிப்பு கேமரா காட்சி

இதுகுறித்து ஷோபனா கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் ்புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பொருத்தியுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மூதாட்டியின் நகையை மர்ம நபர்கள் பறித்துவிட்டு தப்பி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சியின் அடிப்படையில் போலீசார் மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.


Next Story