மூதாட்டியிடம் 2 பவுன் சங்கிலி பறிப்பு
மூதாட்டியிடம் 2 பவுன் சங்கிலி பறிப்பு
தஞ்சாவூர்
ஒரத்தநாட்டை அடுத்துள்ள புலவன்காடு கிராமத்தை சேர்ந்த அப்பாவு மனைவி வசந்தா (வயது75). நேற்றுமுன்தினம் காலை இவர் அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் வசந்தாவிடம் தஞ்சைக்கு வழி கேட்பது போல் பேச்சு கொடுத்தனர். அப்போது அவர் கழுத்தில் கிடந்த 2 பவுன் நகையை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து வசந்தா கொடுத்த புகாரின்பேரில் பாப்பாநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story