வழிகேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் 2½ பவுன் செயின் பறிப்பு
வழிகேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் 2½ பவுன் செயினை பறித்துசென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
வேலூர்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூரை அடுத்த தோளப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சீனு மந்திரி. இவரது மனைவி ராஜம்மாள் (வயது 60). இவர் தனது நிலத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், அகரம்சேரிக்கு வழி கேட்பது போல் கேட்டு, ராஜம்மாள் அருகில் வந்து அவரது கழுத்தில் அணிந்திருந்த 2½ பவுன் செயினை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.
அக்கம் பக்கத்தில் யாரும் இல்லாததால் ராஜம்மாள் வீட்டுக்கு ஓடி வந்தார். பின்னர் இது குறித்து வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story