தொழிலாளி கொலை வழக்கில் உறவினர்கள் 2 பேர் கைது


தொழிலாளி கொலை வழக்கில் உறவினர்கள் 2 பேர் கைது
x

ஆம்பூர் அருகே தொழிலாளி கொலைசெய்யப்பட்ட வழக்கில் அவரது உறவினர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். சீட்டு பணம் தகராறில் கொலை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

திருப்பத்தூர்

தொழிலாளி கொலை

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த கீழ்மிட்டாளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 22). தனியார் ஷூ கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். ஜெயபிரகாஷ் மாட்டுக்கு தீவனம் வைப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் ஜெயபிரகாஷை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்று விட்டனர்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உமராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சீட்டு பணம் தகராறு

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜெயபிரகாஷின் உறவினர்களான பெரியவரிக்கம் பகுதியை சேர்ந்த ஷூ கம்பெனி தொழிலாளி மாணிக்கம் (21) மற்றும் மேஸ்திரி ராஜ்குமார் (44) ஆகியோர் ஜெயபிரகாஷை கொலை செய்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஏலச்சீட்டு பணம் தகராறு காரணமாக ஜெயபிரகாஷை, இருவரும் கொலை செய்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story