வாகன சோதனையில் 2 வழிப்பறி திருடர்கள் கைது
போளூர் அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில் 2 வழிப்பறி திருடர்கள் சிக்கினர்.
போளூர் அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில் 2 வழிப்பறி கொள்ளையர்கள் சிக்கினர்.
போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு குமார் தலைமையில் கலசபாக்கம் இன்ஸ்பெக்டர் ஜனார்த்தனன் மற்றும் போலீசார் நாயுடுமங்கலம் கூட்ரோட்டில் நேற்று முன்தினம் மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து உள்ளனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் ஒருவர் வந்தவாசி சென்னாவரம் கிராமத்தை சேர்ந்த அசோக்குமார் (வயது 19) என்பதும் மற்றொருவர் இந்திரா நகரை சேர்ந்த புவனேஷ்குமார் (23) என்பதும் தொியவந்தது. இருவரும் ஜவ்வாதுமலை அத்திமூர் கிராமத்தை சேர்ந்த ராஜசேகரின் மனைவி மீனாவிடம் 1 ¾ பவுன் நகை மற்றும் செல்போன் பறிப்பில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டனர். இதையடுத்து இருவரையும் ஜமுனாமரத்தூர் போலீசார் கைது செய்தனர்.