2 கூரை வீடுகள் எரிந்து சேதம்
வெண்மணியில் 2 கூரை வீடுகள் எரிந்து சேதம் அடைந்தது.
நாகப்பட்டினம்
சிக்கல்:
கீழ்வேளூர்அருகே வெண்மணி ஊராட்சி, மேலவெண்மணி கிராமம் தேவூர்-கச்சனம் சாலையை சேர்ந்தவர்கள் கிருஷ்ணமூர்த்தி, தனபாக்கியம். இவர்களது கூரை வீடுகள் நேற்று காலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது காற்று வீசியதால் வீடு முழுவதும் தீப்பரவியது. இதில் 2 வீடுகளும் எரிந்து சாம்பலானது. இந்த தீவிபத்தில் வீடுகளில் இருந்த ஆவணங்கள், பீரோ, கட்டில், டி.வி. உள்ளிட்ட தளவாட பொருட்கள், துணிமணிகள் எரிந்து சேதம் அடைந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்வேளூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜகோபால், ஊராட்சி தலைவர் மகாதேவன், வருவாய் ஆய்வாளர் கோமதி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி தமிழக அரசின் நிவாரண பொருட்களை வழங்கினர். இதுதொடர்பாக கீழ்வேளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story