கொள்ளிடம் ஆற்றில் 2 சாமி சிலைகள் கண்டெடுப்பு


கொள்ளிடம் ஆற்றில் 2 சாமி சிலைகள் கண்டெடுப்பு
x

திருமானூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் 2 சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட பெரியமறை கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் வாலிபர்கள் சிலர் நேற்று குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களது காலில் தென்பட்ட கல்லை எடுத்து பார்த்தபோது அது 4 அடி உயரம் கொண்ட தட்சிணாமூர்த்தி சிலை என்பது தெரியவந்தது. மேலும் அருகிலேயே 3 அடி உயரம் கொண்ட அம்மன் சிலை இருப்பதும் தெரியவந்தது. பின்னர் அந்த சிலைகளை கரைக்கு எடுத்து வந்தனர். இதுகுறித்து வருவாய் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் அந்த சிலைகளை கைப்பற்றி அரியலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு கொண்டு செல்ல முயன்றனர். அப்போது கிராமமக்கள் கூறுகையில், இந்த பகுதியில் இன்னும் ஏராளமான சிலைகள் இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே இந்த சிலைகளை கண்டெடுத்து பாதுகாக்க வேண்டும் என்று கூறினர். மேலும் தற்போது கண்டெடுக்கப்பட்ட 2 சிலைகளையும் எங்கள் ஊர் கோவிலிலே வைத்துக் கொள்கிறோம். எனவே இந்த சிலைகளை எங்களிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுத்தனர். அதற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் இந்த 2 சிலைகளையும் நாங்கள் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கிறோம். தாங்கள் இந்த சிலைகளை கோவிலில் வைத்துக்கொள்வதாக கலெக்டரிடம் மனு கொடுத்து பெற்று செல்லுமாறு அறிவுரை கூறினர்.


Next Story