2 விவசாயிகளுக்கு அரிவாள் வெட்டு
களக்காடு மற்றும் ஏர்வாடியில் விவசாயிகள் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
களக்காடு:
களக்காடு மற்றும் ஏர்வாடியில் விவசாயிகள் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
களக்காடு
களக்காடு அருகே உள்ள கீழப்பத்தை தெற்கு தெருவை சேர்ந்தவர் விவசாயி ராஜா (வயது 46). இவருக்கும், இவரது அண்ணன் அதே ஊரைச் சேர்ந்த ரத்தினக்குமார் (50) என்பவருக்கும் பூர்வீக சொத்தை பங்கு வைப்பதில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று ராஜா வீட்டு முன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ரத்தினக்குமாருக்கும், ராஜாவுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ரத்தினக்குமார், ராஜாவை அவதூறாக பேசி, அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த ராஜா சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்குப்பதிவு செய்து ரத்தினக்குமாரை தேடி வருகிறார்.
ஏர்வாடி
ஏர்வாடி அருகே உள்ள சீனிவாசகபுரத்தை சேர்ந்தவர் விவசாயி தவசி கனி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த தங்க நாராயணன் என்பவருக்கும் இடம் தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த தங்க நாராயணன், தவசி கனியை அரிவாளால் வெட்டினார். படுகாயம் அடைந்த தவசி கனி சிகிச்சைக்காக நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி ஏர்வாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.