2 கடைகள் தீப்பிடித்து எரிந்து ரூ.5 லட்சம் பொருட்கள் சேதம்


2 கடைகள் தீப்பிடித்து எரிந்து ரூ.5 லட்சம் பொருட்கள் சேதம்
x

திட்டச்சேரியில் 2 கடைகள் தீப்பிடித்து எரிந்து ரூ.5 லட்சம் பொருட்கள் சேதம் அடைந்தன.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திட்டச்சேரியில் 2 கடைகள் தீப்பிடித்து எரிந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம் அடைந்தன.

2 கடைகள் தீப்பிடித்து எரிந்தது

நாகை மாவட்டம் திட்டச்சேரி ப.கொந்தகை கடைத்தெருவில் அப்பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் பேன்சி ஸ்டோர் மற்றும் கவரிங் நகைக்கடை நடத்தி வருகிறார். அதன் அருகில் சதாம் என்பவர் தென்னை கீற்று விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென 2 கடைகளும் தீப்பிடித்து எரிந்தன. அப்போது திட்டச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த கைப்பந்து போட்டியை தொடங்கி வைக்க அந்த வழியாக சென்ற மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், இதை பார்த்து திருமருகல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

ரூ.5 லட்சம் பொருட்கள் சேதம்

தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) சதீஸ்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருப்பினும் அந்த 2 கடைகளும் முழுவதும் எரிந்து சேதம் அடைந்தன.

இதில் 2 கடைகளில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.தீவிபத்தால் திட்டச்சேரி பகுதிகளில் ஒரு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த தீவிபத்து குறித்து திட்டச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story