திண்டுக்கல்லில் புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு 'சீல்'


திண்டுக்கல்லில் புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு சீல்
x

திண்டுக்கல்லில் புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், துணை சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன், உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வம், இன்ஸ்பெக்டர் உலகநாதன் ஆகியோர் நேற்று திண்டுக்கல் நகரில் பல்வேறு கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது திருச்சி சாலை, ஒய்.எம்.ஆர்.பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 5 கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதில் புகையிலை பொருட்கள் விற்றதாக முதல் முறையாக சிக்கிய 3 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அதேநேரம் 2 கடைகளுக்கு ஏற்கனவே 2 முறை அபராதம் விதிக்கப்பட்டு, நேற்று 3-வது முறையாக சிக்கியது தெரியவந்தது. இதையடுத்து அந்த 2 கடைகளையும் அதிகாரிகள் பூட்டி 'சீல்' வைத்தனர். மேலும் அதன்அருகில் இருந்த கடைக்காரர்களிடம் புகையிலை பொருட்களை விற்கக் கூடாது என்று கடுமையாக எச்சரித்தனர்.

இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் கூறுகையில், கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கஞ்சா, புகையிலை பொருட்களை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு தினமும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது, என்றார்.



Next Story