பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற 2 கடைக்கு 'சீல்'


பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற 2 கடைக்கு சீல்
x
தினத்தந்தி 30 March 2023 12:15 AM IST (Updated: 30 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற 2 கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

நீலகிரி

குன்னூர்,

குன்னூர் பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என தாசில்தார் சிவக்குமார் தலைமையில் வருவாய்த்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.27 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அதனை விற்பனை செய்ததாக வெலிங்டன் பேரக்ஸ், லூர்துபுரம் பகுதியில் 2 கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.


Next Story