எல்லை தாண்டியதாக கைதான இலங்கை மீனவர்கள் 2 பேர் விடுதலை
வேதாரண்யம் அருகே எல்லை தாண்டியதாக கைதான இலங்கை மீனவர்கள் 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
வேதாரண்யம் அருகே எல்ைல தாண்டியதாக கைதான இலங்கை மீனவர்கள் 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
இலங்கை மீனவர்கள்
இலங்கையை சேர்ந்தவர்கள் ஜனார்த்தனன், சசிகரன். மீனவர்களான இவர்கள் வந்த படகு பழுதாகி கடந்த ஆண்டு(2022) ஆகஸ்டு மாதம் 2-ந் தேதி நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே சிறுதலைக்காட்டில் கரை ஒதுங்கியது. இதையடுத்து 2 பேரையும் வாய்மேடு போலீசார் பிடித்து வேதாரண்யம் கடலோர காவல் படையினரிடம் ஒப்படைத்தனர்.
அவர்களை கடலோர காவல் படையினர் கைது செய்தனர். பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் ஏதுமின்றி எல்லை தாண்டி வந்ததாக கூறி இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 2 பேரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
2 பேர் விடுதலை
இதுதொடர்பான வழக்கு விசாரணை வேதாரண்யம் குற்றவியல் மற்றும் உரிமையியல் கோர்ட்டில் நடந்து வந்தது. கடந்த ஓராண்டாக நடந்து வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
இதையொட்டி ஜனார்த்தனன், சசிகரன் ஆகிய 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி தினேஷ்குமார், 2 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.