மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி 2 மாணவர்கள் படுகாயம்

மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி 2 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
கீரமங்கலத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் மெகுல் (வயது 15). நேற்று மாலை மெகுல் தனது பள்ளி நண்பரான கீரமங்கலம் காந்திஜி ரோடு பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் யுகராஜன் (15) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் குளமங்கலம் வழியாக கொத்தமங்கலம் சென்று கொண்டு இருந்தார். கொத்தமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக சென்று சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இதில், 2 மாணவர்களும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மெகுல் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து குறித்து கீரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.