2 மாணவிகள் மாயம்
2 மாணவிகள் மாயமானார்கள்.
திருச்சி கீழ ஆண்டார்வீதியை சேர்ந்த ஞானவேலின் மனைவி மாலதி(50). இவருடைய மகள் ஸ்ரீலக்ஷா (14). இவர் மேல சிந்தாமணி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை மாலதி வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். மாலையில் அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது ஸ்ரீலக்ஷாவை காணவில்லை. அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது, ஸ்ரீலக்ஷாவின் தோழியான அவருடன் படிக்கும் மலைக்கோட்டை பகுதியை சேர்ந்த ஆராதனா (14) என்பவர் நேற்று முன்தினம் காலை வீட்டுக்கு வந்ததும், அவருடன் ஸ்ரீலக்ஷா வெளியே சென்றதும் தெரியவந்தது. இருவரும் நீண்ட நேரம் ஆகியும் அவரவர் வீட்டுக்கு வரவில்லை. அவர்கள் இருவரும் என்ன ஆனார்கள்? என்று தெரியவில்லை. இது குறித்து கோட்டை போலீஸ் நிலையத்தில் மாலதி புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான 2 மாணவிகளையும் தேடி வருகிறார்கள்.