சாணிப்பவுடரை தண்ணீரில் கலந்து குடித்து 2 மாணவிகள் தற்கொலை முயற்சி...!
தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மாணவிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சேலம்,
சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2 மாணவிகள் சாணிப்பவுடரை தண்ணீரில் கலந்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் விஷம் உடல் முழுவதும் பரவியதை அடுத்து மாணவிகல் வாந்தி எடுத்தனர்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள், மாணவிகள் 2 பேரையும் அழைத்துச் சென்று சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வீட்டுப்பிரச்சினை காரணமாக மாணவிகள் 2 பேரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளன. இது குறித்து வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story