பள்ளி மாணவனை தாக்கிய 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்


பள்ளி மாணவனை தாக்கிய 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்
x

பள்ளி மாணவனை தாக்கிய 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: 2 ஆசிரியர்கள் பணியிட மாற்றம்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சேவூர் ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவன் ஒருவர் நண்பர்களுடன் சிகரெட் பிடித்து, மாணவிகள் மீது புகை விட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து ஆசிரியர்கள் திலீப்குமார், வெங்கடேசன், நித்தியானந்தம், பாண்டியன் ஆகியோர் மாணவனை கண்டித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த மாணவன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

இதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் மாணவனின் பெற்றோர், உறவினர்கள் பள்ளி வளாகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் போலீசார் பள்ளியில் குவிக்கப்பட்டனர். விசாரணை நடத்தி துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அதனைத்தொடர்ந்து நேற்று ஆசிரியர்கள் திலீப்குமார், வெங்கடேசன் ஆகிய இருவரை பணியிடை நீக்கமும், நித்தியானந்தன், பாண்டியன் ஆகியோரை பணியிட மாற்றமும் செய்து திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி உத்தரவிட்டார்.


Next Story