2 இளம்பெண்கள் தற்கொலை
நெல்லையில் வெவ்வேறு சம்பவங்களில் 2 இளம்பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
நெல்லையில் வெவ்வேறு சம்பவங்களில் 2 இளம்பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
இளம்பெண்
நெல்லை டவுன் மகிழ்வண்ணநாத புரத்தை சேர்ந்தவர் இசக்கி முத்து. கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி மாலதி (வயது 25). இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
கணவன் -மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் விரக்தி அடைந்த மாலதி நேற்று முன்தினம் வீட்டில் திடீரென்று தூக்குப்போட்டார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். திருமணம் முடிந்து 2 ஆண்டுகளை ஆவதால் இந்த சம்பவம் குறித்து நெல்லை உதவி கலெக்டர் சந்திரசேகர் விசாரணை நடத்தி வருகிறார்.
மற்றொரு சம்பவம்
இதேபோல் டவுன் அக்கசாலை விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன், மெக்கானிக். இவருடைய மகள் மகாலட்சுமி (25), பட்டதாரி. இவர் வீட்டில் பால் காய்ச்சுவதற்கு மின்சார அடுப்பை எடுத்துள்ளார். அப்போது கை தவறி அடுப்பு கீழே விழுந்துள்ளது. இதைக்கண்ட தாயார் கண்டித்தார். இதில் மனம் உடைந்த மகாலட்சுமி நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த 2 சம்பவங்கள் குறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.