விஷம் குடித்து 2 வாலிபர்கள் தற்கொலை
தனித்தனி சம்பவம் விஷம் குடித்து 2 வாலிபர்கள் தற்கொலை
விழுப்புரம்
விழுப்புரம் அருகே சாலையாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி மகன் திரிசங்கு(வயது 21). இவர் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். ஆனால் எந்த வேலைக்கும் செல்லாமல் மது அருந்திக்கொண்டு ஊர் சுற்றி வந்ததால் திரிசங்குவை அவரது தாய் சரளா கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த திரிசங்கு, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை எடுத்து குடித்து விட்டார். உடனே அவரை பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி திரிசங்கு பரிதாபமாக இறந்தார்.இது குறித்த புகாரின்பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்கிரவாண்டி அருகே வி.மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் ராஜேஷ்(21). பிளஸ்-2 படித்துள்ள இவர் சம்பவத்தன்று வீட்டில் அரளி விதையை அரைத்து குடித்து மயங்கி கிடந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திாியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி ராஜேஷ் பரிதாபமாக இறந்தார். தீராத வயிற்று வலி தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.