செம்மண் கடத்த முயன்ற 2 டெம்போ பறிமுதல்


செம்மண் கடத்த முயன்ற 2 டெம்போ பறிமுதல்
x

செம்மண் கடத்த முயன்ற 2 டெம்போக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கன்னியாகுமரி

கொல்லங்கோடு:

கொல்லங்கோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஹரிகுமார் நாயர் தலைமையிலான போலீசார் கரியறவிளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற 2 டெம்போக்களை தடுத்து நிறுத்தினர். உடனே 2 டெம்போவின் டிரைவர்களும் இறங்கி தப்பியோடி விட்டனர். பின்னர், போலீசார் அவற்றை சோதனை செய்தபோது அனுமதியின்றி கேரளாவுக்கு செம்மண் கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 டெம்போக்களையும் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story