2 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்


2 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்
x

2 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை

2 பேர் கைது

புதுக்கோட்டை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் கல்லூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை சோதனையிட்டனர். இதில் ரேஷன் அரிசி மூட்டைகள் காரில் கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து ரேஷன் அரிசியை கடத்திய பாண்டியராஜனை கைது செய்தனர். மேலும் 1,000 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கண்ணன் என்பவர் வீட்டில் பதுக்கியிருந்த 1,000 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் அவரையும் கைது செய்தனர்.

2 டன் பறிமுதல்

2 பேர் கைதானதில் மொத்தம் 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல கே.புதுபட்டி பகுதியில் மொபட்டில் கும்மங்குடி பெரியகருப்பன் ரஞ்சித் என்பவர் 150 கிலோ ரேஷன் அரிசி கடத்தி சென்ற போது புதுக்கோட்டை குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் கைது செய்தனர். மேலும் அரிசி மூட்டைகளை கைப்பற்றினர்.


Next Story