2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 2 பேர் கைது
ராமநாதபுரம் அருகே சரக்கு வாகனத்தில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
ராமநாதபுரம் அருகே சரக்கு வாகனத்தில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
வாகன சோதனை
குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் சூப்பிரண்டு சினேகபிரியா உத்தரவின் பேரில் ராமநாதபுரம் சப்-இன்ஸ்பெக்டர் சிவஞானபாண்டியன் தலைமையில் குமாரசாமி, தேவேந்திரன், முத்து கிருஷ்ணன் ஆகிய போலீசார் ராமநாதபுரம் மாவட்டம் சின்னகீரமங்கலம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் தலா 40 கிலோ எடையுள்ள 50 சாக்கு மூடைகளில் 2 டன் எடையுள்ள ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.
2 ேபர் கைது
இதைத்தொடர்ந்து அந்த ரேஷன் அரிசி மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக அரிசி மற்றும் வாகன உரிமையாளர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கள்ள மணக்குடி பகுதியை சேர்ந்த செல்லத்துரை மகன் சோமசுந்தரம் (வயது28), புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா சுப்ரமணியபுரம் பகுதியை சேர்ந்த சாமிநாதன் மகன் ஹரிஹரன் (24) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.