2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
உவரியில் 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
திருநெல்வேலி
திசையன்விளை:
உவரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் உவரி சோதனை சாவடியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது உவரியில் இருந்து வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரேஷன் அரிசி இருந்தது.
இதுதொடர்பாக அரிசியை கடத்தி வந்த குமரி மாவட்டம் மேலமங்கலத்தை சேர்ந்த கிரண் (வயது 24), பிலாவிளையைச் சேர்ந்த ஜோஸ்மெர்லின் (21), ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த வில்சன் (30) ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் ரேஷன் அரிசியை உவரியில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கடத்தி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் 3 பேரையும், பறிமுதல் செய்த 2 டன் ரேஷன் அரிசி, வாகனத்தை நெல்லையில் உள்ள நுகர்பெருள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story